News November 23, 2024

சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு

image

சென்னை உள்பட சில மாவட்டங்களுக்கு நவ.27, 28 ஆகிய தேதிகளில் 6 செ.மீ முதல் 12 செ.மீ வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு அந்த தேதிகளில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடதமிழகத்தில் அடுத்த வாரம் முதல் மீண்டும் மழை தொடங்கும் எனவும் கூறியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் சனிக்கிழமை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Similar News

News February 19, 2026

சென்னையில் பட்டப்பகலில் சரமாரி அரிவாள் வெட்டு!

image

திருவொற்றியூர் தனியார் நிறுவன ஊழியரான வினோத்குமாரை, நண்பர் ஜெய்ஷயாம் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கத்தியால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் வினோத்குமாரின் வயிறு, தொடைப் பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. தாக்குதல் நடத்திய ஜெய்ஷயாம் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், ரத்தம் சொட்ட சொட்ட உயிருக்கு போராடிய வினோத்குமாரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

News February 18, 2026

சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (பிப்.18) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 18, 2026

சென்னையில் சம்பளப் பிரச்னையா?

image

சென்னை மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். <>இந்த <<>>லிங்கிலோ (அ) கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107 எண்களிலோ புகார் செய்யலாம். ஷேர் செய்து குழப்பத்தில் உள்ளவர்களுக்கு உதவுங்கள்.

error: Content is protected !!