News August 17, 2024
சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

சென்னை ராயப்பேட்டை பகுதியில் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட ‘ஹிஸ்புத் தஹீரிர்’ அமைப்புக்கு ஆள் சேர்க்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சென்னையைச் சேர்ந்த 6 பேரை பயங்கரவாத தடை சட்டத்தில் சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு என்ஐஏக்கு மாற்றப்பட்டு விசாரணை நடக்கிறது. இது தொடர்பாக என்ஐஏ சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News December 5, 2025
சென்னையில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

சென்னை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News December 5, 2025
BREAKING: சென்னையில் போலி மருத்துவர் கைது!

சென்னை அண்ணா நகரில் பாத்தாவது கூட தேர்ச்சி பெறாமல் SRS ஆயுர்வேதா மருத்துவமனை நடத்திய போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருமங்கலத்தைச் சேர்ந்த ரவிக்கு தவறான சிகிச்சை அளித்த நிலையில் டிஎம்ஸ், ஆயுர்வேதா ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார். சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்திய நிலையில் போலி மருத்துவர் வெங்கடேஸ்வரனை காவல்துறையினர் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
News December 5, 2025
சென்னையில் 10.40 லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கம்?

சென்னையில் 40 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில், 10.40 லட்சம் பேர் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது. சென்னையில் அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் 90 ஆயிரம் பேரும், மயிலாப்பூர் தொகுதியில் 88 ஆயிரம் பேரும், கொளத்தூர் தொகுதியில் 73 ஆயிரம் பேரும், சேப்பாக்கம்- திருவல்லிகேணி தொகுதியில் 83 ஆயிரம் பேரும், குறைந்தபட்சமாக திரு.வி.க.நகர் தொகுதியில் 32 ஆயிரம் பேரும் நீக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


