News November 25, 2024
சென்னையில் உள்ள அமைப்பை பாராட்டிய பிரதமர்

பிரதமர் நரேந்திர மோடியின் ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. இதில் பேசிய அவர், சென்னையை சேர்ந்த ‘கூடுகள் ’அறக்கட்டளை, சிட்டுக்குருவியின் எண்ணிக்கையை பெருக்க, இந்த அமைப்பு நான்கு வருடத்தில் 10,000 கூடுகளை சேகரித்துள்ளது. இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டால், சிட்டுக்குருவி கட்டாயம் மீண்டும் நமது வாழ்க்கையின் அங்கமாக ஆகிவிடும் என்றார்.
Similar News
News August 11, 2025
பாலியல் தொல்லை கெபிராஜ் குற்றவாளி என தீர்ப்பு

அண்ணா நகரில் கராத்தே பள்ளி நடத்தி வந்த கெபிராஜ் என்பவர் தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி கற்றுக் கொடுத்து வந்தார். இவர் மீது 2021-ல் இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். பின் அவர் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு மகளிர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிமன்றம் கெபிராஜ் குற்றவானி என தீர்ப்பு வழங்கியது. மேலும், தண்டனை விபரங்கள் நாளை அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
News August 11, 2025
சென்னை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு

79-வது சுதந்திர தின விழா வரும் 15ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடபட உள்ளது. சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை சீா்குலைக்க முயற்சி நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையான நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
News August 11, 2025
சென்னையில் நாளை மின்தடை (1/2)

சென்னையில் நாளை (ஆக.12) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் இடங்கள். கோடம்பாக்கம், டிரஸ்ட் புரம், ஆற்காடு சாலை பவர் ஹவுஸ் முதல் ரயில்வே டிராக் வரை, இன்பராஜபுரம், பஜனை கோயில் தெரு, வரதராஜப்பேட்டை மெயின் ரோடு, காமராஜர் நகர் முழுப் பகுதி, ரங்கராஜபுரம் பகுதி, சூளைமேடு, துரைசாமி சாலை, சுப்புராயன் தெரு, காமராஜர் காலனி 1 முதல் 8வது தெரு பகுதியில் மின்தடை ஏற்படவுள்ளது. (<<17372710>>தொடர்ச்சி<<>>)