News August 9, 2024

சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். கிளாம்பாக்கத்திலிருந்து மதுரை, நெல்லை, குமரி, தூத்துக்குடி, திருச்சி, கோவை, தி.மலை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 275 பேருந்துகளும், நாளை 315 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. கோயம்பேட்டில் இருந்து தி.மலை, நாகை, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு இன்று 55 பேருந்துகளும், நாளை 55 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

Similar News

News October 25, 2025

சென்னை: ரயில்வே கேட்டரிங்கில் வேலை! APPLY NOW

image

சென்னை: வேலை தேடுபவரா நீங்கள்..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. எந்த வித தேர்வுமின்றி இந்திய ரயில்வே கேட்டரிங்கில் ரூ.30,000 சம்பளத்தில் ’Hospitality Monitors’-ஆக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நேர்காணல் மூலமாகவே ஆட்கள் தேர்வு நடைபெறும். இதுகுறித்து தகவல் அறிய, விண்ணப்ப படிவத்திற்கு <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 25, 2025

ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

image

ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான அனஸ்தீசியா டெக்னீசியன், அறுவை அரங்கு டெக்னீசியன், ஆர்தோபீடிக் டெக்னீசியன் ஆகிய ஓராண்டு சான்றிதழ் படிப்புகளில் 48 இடங்களுக்கு நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 17 வயது பூர்த்தியடைந்த, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதியான மாணவர்கள் நவ.14 க்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

News October 25, 2025

சென்னையில் டெங்கு காய்ச்சல் ; மக்களே உஷார்!

image

சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து, காய்ச்சல், கடும் தலைவலி, வாந்தி, மூட்டு வலி, ரத்தப்போக்கு உள்ளிட்ட டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் தினமும் ஏராளமானோர் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வருகின்றனர். டெங்கு அறிகுறி, காய்ச்சல் இருந்தால் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் உடனடியாக சென்று அணுக வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!