News August 17, 2024
சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து

சென்னை கடற்கரை- விழுப்புரம் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து நாளை (ஆக.18) இரவு 9.55, 10.10, 10.40, 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில், சென்னை எழும்பூர்-சென்னை கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
Similar News
News November 14, 2025
சென்னை: நிதி மோசடி வழக்கில் சிறையில் அடைக்க உத்தரவு

மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் சரணடைந்த தேவநாதனை நவ.24 வரை சிறையிலடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ரூ.100 கோடி டெபாசிட் நிபந்தனையை நிறைவேற்றாததால் தேவநாதனை கைது செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இடைக்கால ஜாமின் நீட்டிப்பு மறுக்கப்பட்டதை அடுத்து, சிறப்பு நீதிமன்றத்தில் தேவநாதன் சரண் அடைந்தார். இதை தொடர்ந்து அவரை நவ.24ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
News November 14, 2025
சென்னை: முதல் கணவர் பிள்ளைகளுக்கு பாலியல் தொல்லை

சென்னை வானகரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், முதல் கணவரை பிரிந்து 2வதாக திருமணம் செய்து கொண்டார். அவர் முதல் கணவருக்கு பிறந்த 2 மகள்களிடமும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி பிரிந்து சென்ற தங்களது தந்தையிடம் கூறினர். உடனே அவர், மகள்களுடன் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தனது மனைவி மற்றும் அவரது 2வது கணவர் மீது புகார் அளித்துள்ளார்.
News November 14, 2025
சென்னையில் E-வாகன சார்ஜிங் POINT

சென்னை மாநகராட்சி, நகரில் மின்சார வாகன (EV) பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பல பொது இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது. மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை பார்க்கிங், மைலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்கா, அண்ணா நகர் பூகெய்ன்வில்லா பூங்கா, தேனாம்பேட்டை செம்மொழி பூங்கா, தி.நகர் விளையாட்டு மைதானம், அம்பத்தூர் மங்கள் ஏரி பூங்காவில் நிலையங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.


