News November 25, 2024
சென்னையில் இன்றுமுதல் மாற்றம்!

சென்னை பனகல் பார்க் பகுதியில் மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக அந்த பகுதியில் இன்று(நவ.25) முதல் டிச.1ம் தேதி வரை சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. எனவே இந்த மாற்றத்திற்கு வாகன ஓட்டுநர்கள் ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News December 5, 2025
சென்னையில் 10.40 லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கம்?

சென்னையில் 40 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில், 10.40 லட்சம் பேர் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது. சென்னையில் அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் 90 ஆயிரம் பேரும், மயிலாப்பூர் தொகுதியில் 88 ஆயிரம் பேரும், கொளத்தூர் தொகுதியில் 73 ஆயிரம் பேரும், சேப்பாக்கம்- திருவல்லிகேணி தொகுதியில் 83 ஆயிரம் பேரும், குறைந்தபட்சமாக திரு.வி.க.நகர் தொகுதியில் 32 ஆயிரம் பேரும் நீக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
News December 5, 2025
சென்னை: கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை!

சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அமைந்துள்ள வரசித்தி விநாயகர் கோவிலின் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடப்பட்டது. கோவில் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின் பேரில், R-7 கே.கே.நகர் காவல் நிலையம் வழக்குப்பதிவு செய்தது. சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட ரஞ்சன் (18) என்பவரை இன்று கைது செய்து, ரூ.7,000/- மீட்கப்பட்டது.