News March 21, 2025
சென்னையில் இந்த உணவுகளை மிஸ் பண்ணாதீங்க!

1.பர்மா உணவுகள், வடா பாவ் (பாரிஸ் கார்னர்), 2. கெபாப், இப்தார் உணவுகள் (மண்ணடி), 3. பீப் கடாய் ரோஸ்ட் (தாஷ மக்கான் தெரு), 4. பன் பட்டர் ஜாம் (மவுண்ட் ரோடு), 5.சாட், சமோசா, ஜிலேபி (சௌகார்பேட்டை), 6.மீன் வருவல்கள், மரீனா பீச் (லூப் சாலை), 7.சாண்ட்விச், பிரட் ஓம்லெட்- ரெட் கிராஸ் ரோடு, எழும்பூர். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News March 22, 2025
ஆஞ்சநேயர் கிரிவலம் செல்லும் அதிசய மலைக்கோவில்

கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் செல்லும் சாலையில் உள்ள புதுப்பாக்கத்தில் கஜகிரி என்ற மலை மீது வீர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு வழிபட்டால் நோய்கள், மன அழுத்தம், திருமண தடைகள் நீங்கும். பவுர்ணமி தோறும் இங்கு ஆஞ்சநேயர் கிரிவலம் வருவதாக நம்பிக்கை. அந்த சமயத்தில் நாமும் கிரிவலம் வந்தால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க
News March 22, 2025
சென்னையில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

சென்னையில் இன்று (மார்.22) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அம்பத்தூர், ஆவடி, தாம்பரம் போன்ற புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் குடை அல்லது ரெயின்கோர்டை எடுத்துச் செல்லுங்கள். உங்க ஏரியாவில் மழையா?
News March 22, 2025
சென்னையில் ஐபிஎல் போட்டி: போக்குவரத்து மாற்றம்

சென்னையில் நாளை நடைபெறும் ஐபிஎல் போட்டியை முன்னிட்டு, போக்குவரத்து போலீசார் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. பார்க்கிங் இடங்கள் மற்றும் மாற்று வழிகள் குறித்த முழுமையான வரைபடத்துடன் பொதுமக்கள் இடர்ப்பாடின்றி செல்ல தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ரசிகர்கள் இந்த மாற்றங்களை பின்பற்றுமாறு காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. டிக்கெட்டுகளை காண்பித்து மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம்.