News March 23, 2025
சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News March 28, 2025
சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் இன்று (28.03.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. SHARE பண்னுங்க.
News March 28, 2025
காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இன்னும் சில மணி நேரத்தில் வெடிகுண்டு வெடித்து சிதறும் என கூறியதால் பாம் ஸ்குவாட் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளது. சோதனை முடிந்த பிறகே இது பொய்யான மிரட்டலா என்பது குறித்து தெரியவரும் என கூறப்பட்டுள்ளது. மேலும், அழைப்பு வந்த எண்ணை வைத்து யார் அந்த நபர் என அதிகாரிகள் துப்பு துலக்கி வருகின்றனர்.
News March 28, 2025
குங்குமம் பிரசாதம் பெற்றாலே வாழ்வில் உயர்வு

சென்னை பாரிமுனை தம்புச் செட்டித் தெருவில் பிரசித்தி பெற்ற காளிகாம்பாள் கோவில் உள்ளது. இங்கு வந்து வழிபட்டால் காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம், தும்பட்டம், வீண் பெருமை, தன்நிலை உணராமை போன்றவை நம் மனதில் இருந்து நீங்கும் என்பது ஐதீகம். மேலும், இத்தலத்தில் குங்குமம் பிரசாதம் பெற்றாலே வாழ்வில் உயர்வும், மோட்சமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க.