News August 9, 2024

சென்னையில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

image

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். இன்று மழை பெய்யுமா? பெய்யாதா? என கமெண்ட் பண்ணுங்க.

Similar News

News December 20, 2025

சென்னை வாக்காளர்களுக்கு இன்று சிறப்பு முகாம்

image

சென்னையில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்றும் நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க படிவம்-6, தவறாக சேர்க்கப்பட்ட பெயரை நீக்க படிவம்-7, முகவரி மாற்றம் அல்லது தொகுதி மாற்றம் செய்ய படிவம்-8 ஆகியவை சமர்ப்பிக்கலாம். பெயர் திருத்தம், மாற்றம், சேர்க்கை உள்ளிட்டவற்றை உறுதிப்படுத்த பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தலாம். ஷேர் பண்ணுங்க

News December 20, 2025

சென்னை: வெறி நாய் கடித்து துடி துடித்து பலி

image

சென்னை கொடுங்கையூர், கொய்யாதோப்பு 7வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் அருள் (48) பெயிண்டர். கடந்த 8ம் தேதி சாலையில் சென்றபோது, தெரு நாய் ஒன்று அவரை கடித்துள்ளது. இதற்காக, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். கொடுங்கையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 20, 2025

சென்னை: தூய்மைப் பணியாளர் தற்கொலை!

image

சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் ரவிகுமார். தூய்மைப் பணியாளராக உள்ளார். இவர் வீட்டு வாடகை கட்ட முடியாமல், மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று (டிச.19) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து, அவருடைய உடலை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!