News August 9, 2024
சென்னைக்கு புதிய காவல் அதிகாரிகள் நியமனம் 2/2

24 காவல் அதிகாரிகளுக்கு காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்கி, தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளராக கங்கேஸ்வரி, சைபர் கிரைம் துணை ஆணைராக சரினா பேகம், ஊழல் தடுப்பு பிரிவு கண்காணிப்பாளராக முத்தமிழ், சைபர் அரங்க கண்காணிப்பாளராக மீனாட்சி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News November 21, 2025
சென்னை: 10th போதும், உளவுத்துறையில் வேலை!

சென்னை மக்களே, மத்திய உளவுத் துறையில் காலியாக உள்ள 362 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 25 வயதிற்குட்ப்பட்டவர்கள் நவ. 22ம் தேதி முதல் டிச. 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். ரூ.18,000 – ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <
News November 21, 2025
சென்னை: பைக்கில் சென்றவர் மீது கொலைவெறி தாக்குதல்!

அபிராமபுரத்தைச் சேர்ந்தவர் மவுலி (23) கார் ஓட்டுநர். நேற்று காலை, பைக்கில் மந்தைவெளி ரயில் நிலையம் அருகே சென்றார்.3 பேர் அவரை வழிமறித்து, அரிவாளால் சரமாரியாக வெட்டி தப்பிச் சென்றனர். அபிராமபுரம் போலீசார், கார் ஓட்டுனர் மவுலியை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சையில் உள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News November 21, 2025
சென்னை: வீட்டின் அருகே குடியிருந்த காமுகன்

தேனாம்பேட்டை பகுதியில், வேலைக்கு சென்றிருந்த பெண்ணின் இரு மகள்கள் வீட்டில் தனியாக இருந்ததை அறிந்த ஆட்டோ ஓட்டுநர் வினோத், வீட்டுக்குள் சென்று சிறுமிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதை அறிந்த அவர்கள் தாய், தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று வினோத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


