News April 27, 2024
சென்ட்ரல் – நாகர்கோவில் ரயில் சேவை நீட்டிப்பு

சென்னை சென்ட்ரலில் இருந்து கொச்சுவேலி செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் மே 1ம் தேதியில் இருந்து 29ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் சிறப்பு ரயில் மே 12ம் தேதியில் இருந்து 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரும் வாராந்திர சிறப்பு ரயில் (06012) மே 5ம் தேதியில் இருந்து 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
Similar News
News April 20, 2025
விரைவில் மின்சார பேருந்து சேவை: சிவசங்கர்

சென்னையில், வரும் ஜூன் மாதம் முதல் மின்சார பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, இன்று (ஏப்ரல் 20) செய்தியாளர்களை சந்தித்த அவர், “சென்னையை தொடர்ந்து மதுரையிலும் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மின்சார பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரும்” என்றார். புதிய மின்சார பேருந்துகளை காண பயணிகள் ஆர்வத்துடன் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.
News April 20, 2025
சென்னை மாவட்ட அதிகாரிகள் எண்கள்

▶மாவட்ட ஆட்சியர் – 9444131000, ▶ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) – 9445008132, ▶சிறப்பு துணை கலெக்டர் – 044-25268321, ▶ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) – 044-25268322, ▶உணவு பாதுகாப்பு அலுவலர் – 9442225555, ▶மாவட்ட மேலாளர் (தாட்கோ) – 9445029456, ▶மாவட்ட பின்தங்கிய வகுப்பு நல அலுவலர் – 9445477825, ▶மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் – 7338801253, ▶மாவட்ட வருவாய் அலுவலர் (தபால்) 9842411775.
News April 20, 2025
GST சாலையில் போக்குவரத்து மாற்றம்

தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை GST சாலையில், 4 வழிச்சாலைக்கான மேம்பால கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், அவ்வழியில் இன்று (ஏப்.20) முதல் 3 நாட்களுக்கு (ஏப்.22) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேனாம்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை செல்லும் வாகனங்கள் செனடாப் சாலை, டர்ன்புல்ஸ் சந்திப்பு வழியாக சேமியர்ஸ் சாலையின் வலதுபுறம் திரும்பி நந்தனம் சந்திப்புக்கு சென்று அண்ணா சாலை செல்லலாம்.