News September 13, 2024
செஞ்சிலுவை சங்க கூட்டம் தள்ளிவைப்பு

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்ட அளவிலான கூட்டம் வரும் 17ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. வரும் 16ஆம் தேதி மிலாது நபி கொண்டாடப்படும் என இருந்த நிலையில் தற்போது 17ஆம் தேதி மிலாடி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் செஞ்சிலுவை சங்கத்தின் கூட்டம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 16, 2025
நீலகிரி: ஆட்கொல்லி யானை பிடிக்க கும்கி களமிறங்கியது!

கூடலூர் அருகே ஓவேலி பகுதியில் பொதுமக்களை தாக்கிக் கொல்லும் காட்டு யானையை பிடிக்க தமிழ்நாடு முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் ராகேஷ் குமார் டோக்ரா உத்தரவிட்டுள்ளார். முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர், மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தலைமையில் கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் காட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணித்து பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
News September 16, 2025
வரும் 21ல் நாதக சார்பில் கண்டன போராட்டம்!

நீலகிரி கூடலூர் முழுவதும் வனவிலங்குகளால் ஏற்படும் மனித உயிர் மற்றும் உடைமைகள் இழப்புகளைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டனப் போராட்டம் நடைபெற உள்ளது. வரும் (செப். 21) ஞாயிறன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கூடலூர் காந்தி திடலில் இந்த தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை நாம் தமிழர் கட்சியின் கூடலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் செய்து வருகின்றனர்.
News September 16, 2025
நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் முகாம் நீலகிரி மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை ஊட்டி வட்டம் தும்மனாட்டி பகுதிக்கான முகம் கெந்தோரை அருகே உள்ள சமுதாய கூடத்திலும் நடைபெறுகிறது. பொது மக்கள் தங்கள் பகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள முகாம்களில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.