News April 27, 2025
செங்கோட்டை- மயிலாடுதுறை ரெயில் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணி காரணமாக செங்கோட்டையில் இருந்து காலை 6.55 மணிக்கு புறப்படும் செங்கோட்டை – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்:16848) நாளை ஏப்.28 மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறை உள்ளிட்ட ரெயில் நிலையங்கள் வழியாக செல்லாது. மாறாக, அருப்புக்கோட்டை, காரைக்குடி, புதுக்கோட்டை 0வழியாக மாற்றுப்பாதையில் திருச்சிக்கு வந்து பின்னர் மயிலாடுதுறைக்கு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. *SHARE*
Similar News
News December 18, 2025
தென்காசியில் சிசிடிவி பழுது இலவச பயிற்சி!

செங்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட இலத்தூர் பழைய எஸ்பி ஆபிஸ் அருகில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கியின் சார்பில் ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் கீழ் டிசம்பர் 22ம் தேதி முதல் 13 நாட்களுக்கு சிசிடிவி பொருத்துதல் மற்றும் பழுது நீக்குதல் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. மேலும், விவரங்களுக்கு 8825794607 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது SHARE IT
News December 18, 2025
குற்றாலநாதர் கோயில் திருவிழா நிகழ்ச்சிகள் முழு அறிவிப்பு

குற்றாலத்தில் அமைந்துள்ள திருகுற்றால நாதர்- குழல்வாய்மொழி அம்பாள் திருவாதிரை திருவிழா நிகழ்ச்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிச.25ம் தேதி அதிகாலை 5.40 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. 29ம் தேதி உள்பிரகாரத்தில் நடராஜர் பஞ்சமூர்த்திகள் கேடயத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும் ஜனவரி 2 காலை 9 மணிக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாரதனை நடைபெறும் 3ம் தேதி அதிகாலை 3:30 மணிக்கு தாண்டவ தீபாராதனை நடைபெறும்.
News December 18, 2025
தென்காசி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

தென்காசி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


