News January 3, 2025
செங்கோட்டை – மயிலாடுதுறை ரயில் சேவை வழித்தடம் மாற்றம்

ஜனவரி 4, 7,9,11 ஆகிய தேதிகளில் செங்கோட்டையிலிருந்து மயிலாடுதுறை செல்லும் மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் செங்கோட்டையில் இருந்து விருதுநகர் வரை இதுவரை சென்ற வழித்தடத்திலும், அதற்கு பின்பு மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி வழியாக மயிலாடுதுறை சென்றடையும் என்று தெற்கு ரயில்வே செய்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. பயணிகள் இச்செய்தியை கவனித்து பயணத்தை மேற்கொள்ளவும்.
Similar News
News December 9, 2025
தென்காசி: 2 குழந்தைகளுடன் பெண் திடீர் தர்ணா

தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில், அருகன்குளம் பகுதியை சேர்ந்த கவிதா தனது 2 குழந்தைகளுடன் மனு அளிக்க வந்தார். அப்போது திடீரென அரங்கில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரது கணவர் விபத்தில் உயிரிழந்து விட்டதாகவும், தென்மலை பஞ்சாயத்து சுப்பிரமணியாபுரத்தில் காலியாக உள்ள முதன்மை அங்கன்வாடி பணியிடத்தை தனக்கு வழங்கிட கோரி மனு அளித்துள்ளார்.
News December 9, 2025
தென்காசி: 18 வயது நிரம்பி விட்டதா? உடனே செல்லுங்கள்…

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் புதிய வாக்காளர் சேர்க்கை விண்ணப்பமானது இன்று (டிச.9) முதல் தொடங்குகிறது. 18 வயது நிரம்பிய அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க தேவையான ஆவணங்கள் : ஆதார் கார்டு, போட்டோ 1, பிறப்புச் சான்றிதழ், பள்ளிச் சான்றிதழ். 18 வயதான அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் இணைய அறிவுறுத்தப்படுகின்றனர்.
News December 8, 2025
தென்காசி குறைதீர்க்கும் கூட்டத்தில் மனுக்கள் பெறபட்ட விவரம்

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மனுக்களை பெற்ற்றார். இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 449 மனுக்கள் பெறப்பட்டன.


