News April 17, 2025

செங்குளவிகள் கொட்டி பெண் பலி 

image

மதுராந்தகம் குருகுலம் பகுதியைச் சேர்ந்த மனோகரன்(55), இவரது மனைவி லட்சுமி(53). இவர்களது வீட்டின் அருகே உள்ள மரத்தில் குளவி கூடு கட்டி இருந்தது. நேற்று, திடீரென்று கூட்டை விட்டு பறந்த செங்குளவிகள் மனோகரன், லட்சுமி மற்றும் வீட்டில் இருந்த மூவரை கொட்டி உள்ளது. மயங்கி விழுந்த இவர்களை மீட்டு அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், லட்சுமி செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Similar News

News April 22, 2025

இரவு நேர ரோந்து பணி அதிகாரிகளின் விபரம்

image

இன்று (ஏப்ரல்.21) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் விவரங்கள் செங்கல்பட்டு மாவட்ட காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறை அதிகாரிகளின் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் தங்களுக்கு ஏதேனும் அவசர தேவை ஏற்பட்டால் புகைப்படத்தில் இருக்கும் எண்களை தொடர்பு கொண்டு அவர்களை உதவிக்கு அழைக்கலாம்.

News April 21, 2025

செங்கல்பட்டில் பார்க்க வேண்டிய முக்கிய சுற்றுலா தலங்கள்

image

▶️அண்ணா உயிரியல் பூங்கா, வண்டலூர்
▶️நினைவுச்சின்னங்கள், மகாபலிபுரம்
▶️முதலை வங்கி, மகாபலிபுரம்
▶️வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், வேடந்தாங்கல்
▶️தக்ஷிண சித்ரா அருங்காட்சியகம், முட்டுக்காடு
▶️இந்திய கடல் சிற்பி அருங்காட்சியகம், மகாபலிபுரம்
▶️கலங்கரை விளக்கம், மகாபலிபுரம்
▶️சட்ராஸ் டச்சு கோட்டை, சதுரங்கப்பட்டினம்
▶️முட்டுக்காடு படகு குழாம், முட்டுக்காடு
▶️கோவளம் கடற்கரை, கோவளம்

ஷேர் பண்ணுங்க மக்களே

News April 21, 2025

செங்கல்பட்டில் மிஸ் பண்ணக்கூடாத 8 கோயில்கள்!

image

▶ கந்தசுவாமி முருகன் கோவில், திருப்போரூர்
▶ ஸ்ரீ மஹா பைரவர் ருத்ர ஆலயம், செங்கல்பட்டு
▶ வல்லம் மலை குகைக் கோயில் , வல்லம்
▶ ஞானபுரீஸ்வரர் கோயில், செங்கல்பட்டு
▶ சதுர்புஜ ராமர் கோயில், செங்கல்பட்டு
▶ கழுகு மலை கோயில், திருக்கழுகுன்றம்
▶ ஆதிபராசக்தி கோயில், மேல்மருவத்தூர்
▶ காளத்தீஸ்வரர் திருக்கோயில், காட்டாங்குளத்தூர்
இங்கெல்லாம் யாருடன் செல்ல விரும்புகிறீர்களோ அவர்களுக்கெல்லாம் ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!