News May 10, 2024

செங்குணம் அரசு பள்ளி 100 சதவீத தேர்ச்சி 

image

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 94.77 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  இதில் பெரம்பலூர் வட்டம், செங்குணம் அரசு உயர்நிலைப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மாணவர்கள் அஜய், ராகுல், சந்தியா, மோகித பிரியன் ஆகியோர் கணித பாடத்தில் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 12, 2025

பெரம்பலூர் மலைப்பகுதியில் வெங்கல சிலை கண்டெடுப்பு

image

பெரம்பலூர் மாவட்டம், கோனேரிபாளையம் அருகே மலைப்பகுதிக்கு 100 நாள் வேலைக்காக பெண்கள் சென்றனர். அப்போது மலைப்பகுதியில் இருந்து 2 அடி வெண்கல சிலை கண்டெடுத்துள்ளனர். மேலும் அதனை எடுத்து வந்து கிராமத்தில் உள்ள மாரியம்மன் ஆலயத்தில் வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். இந்நிலையில் அரசு அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்த நிலையில், சிலையை கைப்பற்றி இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 12, 2025

பெரம்பலூர்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி

image

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் இங்கே <>க்ளிக் <<>>செய்து, விண்ணப்பிக்கலாம். SHARE NOW

News December 12, 2025

பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நாளை நடைபெறுகிறது. இதில் சமாதானம் மூலம் தீர்க்க கூடிய வழக்குகளை முடித்துக்கொள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, பெரம்பலூர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04328-296206, 291252 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

error: Content is protected !!