News April 14, 2024
செங்கல் சூளை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்

பெரியநாயக்கன்பாளையத்தில் (ஏப்ரல். 14) இன்று பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை செங்கல் சூளை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் எனத் தெரிவித்தார். பாஜக வேட்பாளர் அண்ணாமலை அம்பேத்கர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார். செங்கல் சூளை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என பிரச்சாரம் செய்தார். இதில், திரைப்பட நடிகர் சரத்குமார், எம்எல்ஏ வானதி சீனிவாசன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
Similar News
News October 21, 2025
கோவை-திண்டுக்கல் சிறப்பு ரயிலை நீட்டிக்க வலியுறுத்தல்

கந்தசஷ்டி விழா அக்டோபா் 22 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனால் கோவை-திண்டுக்கல் இடையேயான முன்பதிவில்லா மெமு ரயிலை அக்டோபா் 28-ஆம் தேதி வரை நீட்டித்து இயக்கினால், கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மக்கள் பழனி செல்ல வசதியாக இருக்கும் என ரயில் பயணிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
News October 20, 2025
நாளையும் மலை ரயில் சேவை ரத்து

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால், ஊட்டி மலை ரயில் பாதையில் கல்லாறு – ஹில்குரோவ் இடையே மண் சரிந்து பாறாங்கற்கள் விழுந்து தண்டவாளம் சேதமடைந்தது. இதனை தொடர்ந்து நேற்று, இன்று என இரு தினங்கள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில், தண்டவாளத்தில் விழுந்த பாறாங்கற்களை வெடிவைத்து தகர்க்க இருப்பதால், நாளையும் ரயில் சேவை (அக்.21) ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
News October 20, 2025
கோவையில் இங்கு பட்டாசு வெடிக்க மாட்டார்கள்!

கோவை மாவட்டம் சூலூர் அருகே கிட்டாம்பாளையம் கிராமத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிய வகை வவ்வால் இனங்கள் உள்ளன. இதனை பாதுகாப்பதற்காக, கடந்த 26 ஆண்டுகளாக கிராம மக்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காமல் இருந்து வருகின்றனர். மேலும் இங்குள்ள ஆலமரம் மற்றும் புளிய மரங்களில் வசித்து வரும் வவ்வால்களை பாதுகாக்க சரணாலயம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.SHAREit