News March 4, 2025
செங்கல்பட்டு: 9 சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

ஒரகடம் காவல் எல்லைக்குட்பட்ட வல்லக்கோட்டை கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த 10.7.2019 அன்று அதேபகுதியை சேர்ந்த பூ வியாபாரி அருணாச்சலம் (65) என்பவரால் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டார். இதுகுறித்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று அருணாசலம் மீது குற்றம் நிரூபணம் ஆனதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர்.
Similar News
News December 7, 2025
செங்கல்பட்டு: B.E. முடித்தால் ரூ.1,40,000 சம்பளத்தில் அரசு வேலை!

செங்கல்பட்டு மக்களே, ஏவுகனை மற்றும் பாதுகாப்பு உபகரனங்கள் தயாரிக்கும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 80 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 27 வயதுகுட்பட்ட B.E./ B. Tech, முதுகலை டிகிரி படித்தவர்கள் டிச 29க்குள் இங்கு <
News December 7, 2025
செங்கல்பட்டு: ஹோட்டலில் தரமற்ற உணவா? தயங்காம சொல்லுங்க!

தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பு துறை பல இடங்களில் தீவிர சோதனையில் ஒரு பக்கம் ஈடுபட்டு வருகிறது. ஆனால் மறுபக்கம் தரமற்ற உணவு, கலப்படப் பொருட்களை கொண்டு சமைத்தல் போன்ற புகார் தொடர்ந்து எழுகிறது. சமீபத்தில் சென்னை உணவகத்தில் தேரை, திருவள்ளூர் உணவகத்தில் எலி, கிருஷ்ணகிரி உணவில் பாம்பு என குற்றசாட்டு எழுந்தது. இது போன்ற பிரச்சனைகளுக்கு உடனடியாக 9444042322 என்ற Whatsapp எண்ணில் புகார் தெரிவிக்கலாம். ஷேர்!
News December 7, 2025
செங்கல்பட்டு மக்களே இந்த WEEKEND பிளான் ரெடி

செங்கல்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காட்டில் தட்சிணசித்ரா என்ற அருங்காட்சியகம் உள்ளது. இங்கு ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் கலை, கட்டிடக்கலை, கலாச்சாரம், கைவினை மற்றும் வாழ்க்கை முறையை சித்தரிக்கும் 18 வீடுகள் உள்ளன. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா என தென் மாநிலத்தின் கலை பொருட்களை காணலாம். நுழைவு கட்டணம் ரூ.20- 110 மட்டுமே. விசிட் பண்ணுங்க. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.


