News June 27, 2024

செங்கல்பட்டு: 11 பேருக்கு வீட்டு மனை பட்டா

image

செங்கல்பட்டு வட்டத்திற்குட்பட்ட 11 பேருக்கு உங்கள் ஊரில் உங்களை தேடி திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களில் சார் ஆட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார். செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண சர்மா, வட்டாட்சியர் பூங்குழலி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Similar News

News September 19, 2025

செங்கல்பட்டு: கால்நடைகளை வளர்க்க ஆசையா?- DON’T MISS!

image

செங்கல்பட்டு அடுத்த, காட்டுப்பாக்கத்தில் வேளாண் அறிவியல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு வரும் செப்.24ல், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் வளர்ப்பது குறித்த இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி முகாமில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாமே ஆடு, மாடுகளை வளர்த்து லட்சக்கணக்கில் லாபம் பெறலாம்

News September 18, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

செங்கல்ப்ட்டு மாவட்டத்தில் இன்று (செப்-18) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 18, 2025

தாம்பரம் காவல்துறை விழிப்புணர்வு

image

செங்கல்பட்டு மாவட்டம், சேலையூர் அனைத்து மகளிர் காவல்துறையினாரால்
வைஷ்ணவ கல்லூரியில் உள்ள மாணவியருக்கு காவல் உதவி செயலியின் நன்மைகள் மற்றும் பயன்பாடு, POCSO சட்டம் விழிப்புணர்வு மற்றும் போதைப்பொருள் பாவனை தடுப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை இன்று
(செப் -18) நடத்தியது. ஏராளமான மாணவியர்கள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!