News April 16, 2025
செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை

செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 21 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு, ரூ.34,000 வரை சம்பளம் வழங்கப்படும். B.Sc, BSMS, BUMS, Literate படித்த 45 வயதிற்கு உட்பட்டவர்கள் நாளை(ஏப்.16) மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். <
Similar News
News April 20, 2025
செங்கல்பட்டு இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

இன்று (மார்ச்.20) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் விவரங்களை செங்கல்பட்டு மாவட்ட காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறை அதிகாரிகளின் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் தங்களுக்கு ஏதேனும் அவசர தேவை ஏற்பட்டால் புகைப்படத்தில் இருக்கும் எண்களை தொடர்பு கொண்டு அவர்களை உதவிக்கு அழைக்கலாம்.
News April 19, 2025
சிங்கம் மற்றும் புலியை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஒரு சிங்கம் மற்றும் ஒரு புலியை மூன்று மாதங்களுக்கு தத்தெடுத்துள்ளார். “ஷேர்யார்” என்ற சிங்கத்தையும் “யுகா” என்ற புலியையும் அவர் தத்தெடுத்து, அவற்றின் பராமரிப்பு செலவை ஏற்றுக்கொண்டுள்ளார். இதன் மூலம் உயிரியல் பூங்காவின் பராமரிப்பு செயல்பாடுகளுக்கு அவரது பங்கு மிக்க மகிழ்ச்சியளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 19, 2025
பெண்கள் உதவி மையத்தில் வேலை

தாம்பரம் பெண்கள் உதவி மையத்தில், தொகுப்பூதிய மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.10,000 – ரூ.12,000 வழங்கப்படும். பாதுகாப்பாளர் பணிக்கு பள்ளிப்படிப்பு முடித்த ஆண், பெண்ணும், பன்முக உதவியாளருக்கு சமையல் தெரிந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த லிங்கில் விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டு, வரும் 30ஆம் தேதிக்குள் சென்னை கலெக்டர் ஆபிசுக்கு நேரடியாகவோ, இ-மெயில் மூலமாகவோ அனுப்பலாம்.