News October 25, 2024
செங்கல்பட்டு மாவட்டத்தில் 26 தாசில்தார்கள் இடமாற்றம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 13 துணை தாசில்தார்கள், அண்மையில் காவல்துறை பயிற்சிக்கு சென்றனர். இந்நிலையில், அவர்கள் பயிற்சி முடித்து பணிக்கு திரும்பினர். அதன்பின், காவல்துறை பயிற்சி முடித்த 13 துணை தாசில்தார்கள் உட்பட 26 துணை தாசில்தார்களுக்கு, தாலுகா அலுவலகங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்து, கலெக்டர் அருண்ராஜ் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
Similar News
News September 18, 2025
நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை தாம்பரம் மாநகராட்சி, திருப்போரூர், புனித தோமையார் மலை நகர்புற பஞ்சாயத்து, சித்தாமூர் மதுராந்தகம் காட்டாங்குளத்தூர் டு திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளில் நாளை (செப்-18) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் தேவைக்கு ஏற்ப குறை மற்றும் கோரிக்கை கொடுக்கலாம். அதிகாரிகள் விரைந்து செயல்படுவார்கள்.
News September 18, 2025
கிளாம்பாக்கம்: 705 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

வார இறுதி மற்றும் மகாளய அமாவாசையை முன்னிட்டு, கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு 705 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதுகுறித்து போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் செப்.19 அன்று 355 சிறப்புப் பேருந்துகளும், செப்.20 அன்று 350 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 18, 2025
ரூபாய். 20 கோடி மதிப்பிலான கொக்கைன் பறிமுதல்

மீனம்பாக்கம், விமான நிலையத்தில், இன்று (செப்.17) காலை, ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து, ரூ.20 கோடி மதிப்புள்ள 2 கிலோ கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. சாக்லேட் டப்பாக்களில் மறைத்து வைத்து இந்த போதைப்பொருள் கொண்டு வரப்பட்டது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கென்யா நாட்டைச் சேர்ந்த அந்த நபரை, விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.