News March 21, 2024

செங்கல்பட்டு: மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் ரத்து

image

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் (மார்ச்.22) நாளை நடைபெற இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான முகாம்கள் நாடாளுமன்ற தேர்தல்-2024 முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 14, 2025

செங்கல்பட்டு இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, காவல்துறை இன்று இரவு ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு, மாமல்லபுரம், மற்றும் மதுராந்தகம் ஆகிய மூன்று வட்டங்களுக்குட்பட்ட ஒன்பது காவல் நிலையங்களில், துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) தலைமையில் காவல்துறையினர் ரோந்து செல்லவுள்ளனர்.

News October 14, 2025

செங்கல்பட்டு: விபத்தில் 6 வயது சிறுவன் உயிரிழப்பு

image

(அக்.13) சுரேஷ் (48) என்பவர் காரில் பையனூரில் இருந்து திருப்போரூருக்கு சென்று கொண்டிருந்தார். ஆலத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து வலதுபுறம் திரும்பிய போது பின்னால் வந்த கார் மோதியது. இதில் காரில் இருந்த ஏர் பேக் திறந்து முடியதில் காரில் முன்னாள் இருந்த கவின் (6) என்ற சிறுவன் மூச்சு திணறி உயிரிழந்தார். திருப்போரூர் போலீசார் விசாரிக்கின்றனர்‌.

News October 14, 2025

செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லையா?

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் அல்லது உங்க மாவட்ட சுகாதார அலுவலகத்தில் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!