News May 17, 2024
செங்கல்பட்டு: மழைக்கு வாய்ப்பு!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் செங்கல்பட்டில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 24, 2026
செங்கல்பட்டு, காஞ்சிபுரம,கரூர் மாவட்டங்களில் ஆட்சியர் மாற்றம்

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் கரூர் மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்களை (கலெக்டர்கள்) மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நிர்வாக காரணங்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த மாற்ற உத்தரவின் பேரில் புதிய அதிகாரிகள் விரைவில் பொறுப்பேற்க உள்ளனர். இதன் மூலம் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் நிர்வாக பணிகள் புதிய கலெக்டர்களின் தலைமையில் தொடர்ந்து நடைபெறவுள்ளன.
News February 24, 2026
செங்கை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3) ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4) குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5) முதியோருக்கான அவசர உதவி -1253, 6) தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7) பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. *மற்றவர்களுக்கும் உதவியாக அமைய இதனை ஷேர் பண்ணு
News February 24, 2026
செங்கை: மின்சார ரயிலில் செல்வோர் கவனத்திற்கு!

சென்னை எழும்பூரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று முதல் பல மின்சார ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் மேலும் 49 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 89 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் எழும்பூர்-செங்கை சிறப்பு மின்சார ரயில்கள் சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாத்தில் நிறுத்தப்படாது. ஷேர் பண்ணுங்க


