News August 3, 2024
செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 54ஆவது பட்டமளிப்பு விழா இன்று மாலை நடைபெற்றது. விழாவில் பட்டம் பெற்ற 100 மருத்துவ மாணவ, மாணவியர்களுக்கு அமைச்சர் மா.சுப்ரமணியன், அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினர்.
Similar News
News December 8, 2025
செங்கல்பட்டு: சினிமா பாணியில் இளைஞர் காரில் கடத்தல்

திருமங்கலத்தில் கடை வைத்திருக்கும் தர்மராஜ் என்பவரை, நேற்று முன்தினம் அவரது கடைக்கு வந்த கும்பல் காரில் கடத்திச் சென்றது.நிதி நிறுவன முதலீடு தொடர்பாகப் பணத்தைத் திரும்பக் கேட்டு இந்தக் கடத்தல் நடந்தது விசாரணையில் தெரியவந்தது. கோவளம் அருகே போக்குவரத்து போலீசார் காரை மடக்கி தர்மராஜை மீட்டனர். கடத்தலில் ஈடுபட்ட பல்லவரத்தை சேர்ந்த ஸ்ரீஜி, பிரேம்குமார், வேணுகோபால் ஆகிய 5பேரையும் போலீசார் கைது செய்தனர்.
News December 8, 2025
செங்கல்பட்டு: ரீலிஸ் மோகத்தால் நடந்த பயங்கர விபத்து!

திருவள்ளுவரை சேர்ந்த சசி மற்றும் தனுஷ் இருவரும் விலை உயர்ந் ஹெல்மெட்டை அணிந்துகொண்டு கூடுவாஞ்சேரி அருகே வேகமாக செல்லும் போது ரீலிஸ் எடுத்துக்கொண்டே சென்றனர். அப்போது முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதி மூவரும் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது, அவர்களுக்கு உதவ வந்த ஆட்டோ டிரைவர் மீதும் பைக் மோதி 5 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் விசாரணை துவங்கியது.
News December 8, 2025
செங்கல்பட்டு: நூதன முறையில் லட்சக்கணக்கில் மோசடி!

மடிப்பாக்கத்தைச் சேர்ந்த உணவக மேலாளர் சங்கர், தவான் என்பவரிடம் ரூ.7 லட்சம் கொடுத்து ஏமாந்துள்ளார். சுங்க இலாகா அதிகாரிகளுடன் தொடர்பு இருப்பதாகவும், ஐ-போன் மற்றும் லேப்டாப் போன்ற விலை உயர்ந்த பொருட்களைக் குறைந்த விலையில் வாங்கித் தருவதாகவும் கூறி தவான் பணத்தைப் பெற்றுள்ளார். ஆனால், பொருட்கள் ஏதும் தராமல் ஏமாற்றியுள்ளார். சங்கரின் புகாரின் பேரில், மோசடி செய்த தவான் என்பவரைப் போலீசார் கைது செய்தனர்.


