News November 3, 2025
செங்கல்பட்டு: பெண்களிடம் அத்துமீறல்- கம்பி எண்ணும் காமுகன்!

பெரும்பாக்கம், எழில் நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர்(45). திருமணம் ஆகாத இவர் தனது தாயுடன் வசித்து வருகிறார். இதனிடையே சந்திரசேகர் கடந்த சில மாதங்களாக, சாலையில் செல்லும் பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளிடையே பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அப்பகுதியில் அச்சம் நிலவி வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் சந்திரசேகரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 8, 2025
செங்கல்பட்டு: நூதன முறையில் லட்சக்கணக்கில் மோசடி!

மடிப்பாக்கத்தைச் சேர்ந்த உணவக மேலாளர் சங்கர், தவான் என்பவரிடம் ரூ.7 லட்சம் கொடுத்து ஏமாந்துள்ளார். சுங்க இலாகா அதிகாரிகளுடன் தொடர்பு இருப்பதாகவும், ஐ-போன் மற்றும் லேப்டாப் போன்ற விலை உயர்ந்த பொருட்களைக் குறைந்த விலையில் வாங்கித் தருவதாகவும் கூறி தவான் பணத்தைப் பெற்றுள்ளார். ஆனால், பொருட்கள் ஏதும் தராமல் ஏமாற்றியுள்ளார். சங்கரின் புகாரின் பேரில், மோசடி செய்த தவான் என்பவரைப் போலீசார் கைது செய்தனர்.
News December 8, 2025
செங்கல்பட்டு இரவு ரோந்து பணி காவலர் விவரம்

செங்கல்பட்டு நேற்று (டிசம்பர்- 07) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.