News August 26, 2024
செங்கல்பட்டு பரனூர் சுங்கசாவடியில் தீவிர சோதனை

ஆர்.எஸ்.எஸ் தேசிய தலைவர் மோகன் பகாவத் பாண்டிச்சேரியில் இருந்து திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை செங்கல்பட்டு வழியாக சென்னை செல்லவுள்ளார். இதனால், இன்று (ஆக.26) செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கசாவடியில் வெடிகுண்டு செயலிழப்பு சோதனை குழு மற்றும் போலீசார் வாகனங்களில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News October 17, 2025
செங்கல்பட்டில் இரவு ரோந்து செல்லும் காவலர் விவரம்!

செங்கல்பட்டில் இன்று (அக்.17) இரவு 10 மணி முதல் காலை 6 வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசியின் வாயிலாக அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 17, 2025
செங்கல்பட்டு மாணவர்களின் கவனத்திற்கு…

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் பதிவு ஒன்று வெளியாகியுள்ளது. அதில், தமிழக அரசின் கல்வி உதவித்தொகையை வழங்குவதாக சில நபர்கள் கல்லூரி மாணவர்களை தொடர்பு கொண்டு, அவர்களுடைய வங்கி கணக்கு எண் மற்றும் பிற தகவல்களை பெற்று OTP மூலம் வங்கி கணக்கிலுள்ள பணத்தை ஏமாற்றி திருடும் சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெறுகிறது எனவும், வங்கி கணக்கு பற்றிய விவரங்களை யாரிடமும் பகிர வேண்டாமென அறிவுறுத்தியுள்ளது.
News October 17, 2025
செங்கல்பட்டு: கேஸ் சிலிண்டர் இருக்கா? இது கட்டாயம்

செங்கல்பட்டு மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)