News May 17, 2024

செங்கல்பட்டு: கொத்தனார் பலியான சோகம்

image

படப்பை ஒரத்தூர் பகுதியை சேர்ந்த ஜோதி (49). கொத்தனார் வேலை பார்த்து வந்த இவர் அதே பகுதியில் மணி என்பவருக்கு சொந்தமான வீடு கட்டுமான பணியில் நேற்று இரவு ஈடுபட்டிருந்தார். அப்போது, பலகையில் கட்டியிருந்த மின் விளக்கு தவறி கீழே விழுந்தது. அதை எடுக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். உடலை கைபற்றிய மணிமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News December 15, 2025

செங்கல்பட்டு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

image

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு அறிவிப்பு ஒன்று இன்று (டிச.15) வெளியிட்டுள்ளது. அதில் குடிபோதையில் பயணம் செய்ய வேண்டாம் எனவும், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

News December 15, 2025

செங்கை: 8th, 10th, +2, டிப்ளமோ, டிகிரி படித்தவரா நீங்கள்?

image

செங்கை மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் டிச.19ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெற உள்ள இந்த முகாமில் 8th, 10th, +2, டிப்ளமோ, ITI, டிகிரி படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். முகாமானது காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். மேலும் விவரங்களுக்கு இந்த <>லிங்க்கை <<>>கிளிக் செய்யலாம். தொடர்புக்கு (044-27426020) ஷேர்!

News December 15, 2025

செங்கல்பட்டு: EB பில் நினைத்து கவலையா??

image

செங்கல்பட்டு மக்களே உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா??இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! இங்கு <>கிளிக் <<>>செய்து TNEB ‘பில் கால்குலேட்டர்லில் (Domestic) என்பதை தேர்ந்தெடுத்து, இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். பில் கூட வந்தா 94987 94987 எண்ணில் புகார் தெரிவியுங்க.SHARE!

error: Content is protected !!