News May 7, 2025
செங்கல்பட்டு: ஏரியில் மூழ்கி 5ம் வகுப்பு மாணவன் பலி!

செங்கல்பட்டு அடுத்த அம்மணம்பாக்கத்தை சேர்ந்த விஜயகுமார் இவரது மகன் நிரஞ்சன்(9). இவர் கோடை விடுமுறை என்பதால், நேற்று முன்தினம் காலை வெளியில் விளையாட சென்றவர் மதியம் வரை வீடு திரும்பவில்லை. அச்சமடைந்து பெற்றோர் தேடிய நிலையில், அம்மணம்பாக்கம் ஏரியில் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். இசம்பவம் குறித்து செங்கல்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 24, 2025
செங்கல்பட்டு: அரசு தேர்வர்களே.. இதை கவனியுங்க!

அரசுத் தேர்வுகளுக்கு வீட்டில் இருந்தே தயாராகும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயனுள்ள சில இணையதளங்கள் உள்ளன. அவற்றின் மூலம், Mock Tests, Reasoning Materials மற்றும் Notes-களை முற்றிலும் இலவசமாகவே பயன்படுத்திக்கொள்ள முடியும். இங்கு <
News November 24, 2025
செங்கல்பட்டு திருப்பதி கோயில் பற்றி தெரியுமா?

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோயில்களில் ஒன்று திருமலைவையாவூர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில். இக்கோயில் “தென்திருப்பதி” என்றும் அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 420 அடி உயரத்தில் உள்ளது. திருப்பதியில் உள்ளது போல் அமைப்பும் பூஜை முறைகளும் இங்கு கடைபிடிக்கப்படுகின்றன. திருமணம் மற்றும் புத்திர தோஷம் உள்ளவர்களும் இங்கு வந்து வழிபடுவது வழக்கம். ஷேர் பண்ணுங்க!
News November 24, 2025
செங்கல்பட்டு: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க


