News May 7, 2025

செங்கல்பட்டு இரவு ரோந்து போலீசாரின் விவரம் வெளியீடு

image

செங்கல்பட்டு போலீசாரின் “Knights on Night Rounds” (01.05.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர நேரங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

Similar News

News December 13, 2025

செங்கல்பட்டு: நடந்து சென்ற வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்!

image

மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் முகமது ரிஸ்வான் (23 வயது). இவர் சண்முகம் சாலையில் உள்ள ஒரு கைபேசி கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, முகமது ரிஸ்வான் காந்தி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ​​அடையாளம் தெரியாத ஒருவர் அவரைத் கட்டையால் தலையில் தாக்கி, அவரிடமிருந்த கைபேசி மற்றும் 400 ரூபாயைப் பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

News December 13, 2025

செங்கல்பட்டு: சிகிச்சைக்காக விமானத்தில் வந்த பெண் மரணம்!

image

வங்காளதேச டாக்காவிலிருந்து வந்த விமானம் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதில் நுரையீரல் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற வந்த 32 வயதான அக்லிமா அக்தர் என்ற பெண் பயணி விமானம் சென்னை வான் எல்லையில் வந்தபோது திடீரென மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டார். விமானம் தரையிறங்கியதும் மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்ததில், அவர் இருக்கையிலேயே இறந்துவிட்டது தெரிய வந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

News December 13, 2025

செங்கல்பட்டு இரவு ரோந்து செல்லும் காவலர் விவரம்

image

செங்கல்பட்டு (டிசம்பர்- 12) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!