News September 15, 2024
செங்கல்பட்டு அருகே 5 பேர் கைது

பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் பாண்டுரங்கன் (35). கடந்த 7ம் தேதி முதல் காணவில்லை என தாயார் சரஸ்வதி மேடவாக்கம் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் 7ம் தேதி நன்மங்கலம் ஏரிக்கரையில் நண்பர்கள் தமிழரசன், ராஜேஷ், முத்துராஜ், ரஞ்சித்,ராம்குமார் ஆகியோருடன் மது அருந்தும் போது ஏற்பட்ட பிரச்சனையில் நண்பர்கள் பாண்டுரங்கனை தாக்கி ஏரியில் வீசி உள்ளனர்.உடல் இன்னும் கிடைக்கவில்லை.5 பேரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News August 11, 2025
செங்கையில் உள்ளவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட 2,000 பக்தர்கள் அறுபடை வீடுகளுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். ஆன்மிகப் பயணம் முழுமையாக கட்டணமின்றி ஏற்பாடு செய்யப்படுகிறது. செப்டம்பர் 15ம் தேதிக்குள் www.hrce.tn.gov.in என்ற இளையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இதனை மூத்த குடிமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என செங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News August 11, 2025
செங்கல்பட்டில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

செங்கல்பட்டு மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <
News August 11, 2025
ஏசி மின்சார பேருந்து சேவை தொடக்கம்

சென்னையை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ஏசி மின்சார பேருந்து சேவை செங்கல்பட்டில் தொடங்கப்பட உள்ளது. ரூ. 233 கோடி மதிப்பீட்டில் 55 ஏசி பேருந்துகள் உட்பட 135 மின்சாரப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து இந்த சேவையைத் தொடங்கி வைக்கிறார்.