News August 16, 2024
செங்கல்பட்டு அருகே வேன் கவிழ்ந்து 16 பேருக்கு படுகாயம்

பவுஞ்சூரிலிருந்து பெண்கள் உள்பட, 18 பேர், நாவலூரில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு இன்று மகேந்திரா டூரிஸ்ட் வேனில், வேலைக்கு சென்றனர். திருப்போரூர் ஆறு வழிச் சாலையில் சென்றபோது, எதிர்பாராத விதமாக பின்புற சக்கரம் வெடித்ததில், நிலைதடுமாறிய வேன் சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவற்றில் மோதி தலை கீழாக கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த பெண்கள் உட்பட 16 பேருக்கு தலை, கால், கை என படுகாயம் ஏற்பட்டது.
Similar News
News November 12, 2025
செங்கல்பட்டு: தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய அரசு வேலை

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் இந்தியா முழுவதும் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், <
News November 12, 2025
மதுராந்தகம் கோட்டாட்சியர் அலுவலக பொருட்கள் ஜப்தி

ஈ.சி.ஆர்., சாலையில் உள்ள தென்பட்டினத்தில் சாலை அமைக்கும் பணிக்காக பிரதீப் (ம) அவரது தந்தைக்கு சொந்தமான இடத்தை அரசு கையகப்படுத்தியது. இந்நிலையில் அரசு முறையான இழப்பீடு வழங்காததால் பிரதீப் மதுராந்தகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி மதுராந்தகம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அறைகலன் பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார் அதன் பேரில் இன்று ஜப்தி நடவடிக்கை நடைபெற்று வருகிறது.
News November 12, 2025
செங்கல்பட்டு: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

செங்கல்பட்டு மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே<


