News March 20, 2024
செங்கல்பட்டு அருகே தீவிபத்து

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே படாளம் என்ற இடத்தில் கேரளாவில் இருந்து சென்னைக்கு டாரஸ் லாரியில் மரபிளைவுட் ஏற்றிச் சென்ற லாரி இன்று (மார்ச்-20) திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டுனர் மற்றும் தீயணைப்பு துறையினர் வாகனத்தின் தீயை அணைத்ததால் பல லட்சம் மதிப்புடைய மர பிளைவுடுகள் தப்பின. இதுகுறித்து படாளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 5, 2025
செங்கல்பட்டில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

செங்கல்பட்டு மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News December 5, 2025
செங்கல்பட்டில் 5.31 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?

தமிழகத்தில் டிச.16-ம் தேதியுடன் நிறைவடையும் எஸ்ஐஆர் பணியில் 77.52 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படவாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட அளவில் அதிகபட்சமாக சென்னையில் 10.40 லட்சம் பேர் (இறந்தவர்கள் மட்டும் 1.49 லட்சம்) பேர் நீக்கப்படலாம். அதற்கடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 5.31 லட்சம் பேர் நீக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
News December 5, 2025
செங்கல்பட்டு: இதற்கு எப்போது தீர்வு?

மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா, ஆங்கில புத்தாண்டு, பொங்கல், கர்நாடக பக்தர்கள் படையெடுப்பு என, விழாக்காலம் துவங்க உள்ளது. இக்காலத்தில் வாகன நெரிசலால் போக்குவரத்து முடங்காமல் தவிர்க்க, நகராட்சி நிர்வாகம் முன்னேற்பாடு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஏற்கனவே இங்கு வாகன நெரிசலால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் பாதிக்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.


