News October 24, 2024
செங்கல்பட்டில் வரும் 26ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில், செங்கல்பட்டு பகுதியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன்படி, மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூரில் உள்ள லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
Similar News
News August 11, 2025
செங்கல்பட்டில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

செங்கல்பட்டு மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <
News August 11, 2025
ஏசி மின்சார பேருந்து சேவை தொடக்கம்

சென்னையை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ஏசி மின்சார பேருந்து சேவை செங்கல்பட்டில் தொடங்கப்பட உள்ளது. ரூ. 233 கோடி மதிப்பீட்டில் 55 ஏசி பேருந்துகள் உட்பட 135 மின்சாரப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து இந்த சேவையைத் தொடங்கி வைக்கிறார்.
News August 11, 2025
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவு

செங்கல்பட்டு மாவட்டத்தில் வரவிருக்கும் பருவமழையை முன்னிட்டு, மழைநீர் தேங்குவதைத் தடுக்க மாவட்ட ஆட்சியர் சினேகா உத்தரவிட்டுள்ளார். தாழ்வான பகுதிகளைக் கண்டறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க 33 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் விரைவில் ஆய்வுகளைத் தொடங்கி, மழை பாதிப்புகளைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இதன் மூலம், பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.