News August 25, 2024
செங்கல்பட்டில் போக்குவரத்து மாற்றம்

செயின்ட் தாமஸ் மவுன்ட் – பூந்தமல்லி சாலையில், மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக இன்றும், நாளையும் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. போரூரில் இருந்து மவுன்ட் சாலை வழியாக கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் ராணுவ சாலை சந்திப்பில் இருந்து இடது புறமாக திரும்பி புஹாரி ஹோட்டலுக்கு எதிரே உள்ள போர் கல்லறை சாலையில் செல்ல வேண்டும்.
Similar News
News September 18, 2025
செங்கல்பட்டு: யூடியூபர் வராகி மீது 2 வழக்குகள் பதிவு

பிரபல யூடியூபர் வராகி, அரசு மருத்துவமனை முன்னாள் முதல்வர் தேரணிராஜன் மற்றும் நடிகர் விஷால் குறித்து தனது “(X)” தளத்தில் அவதூறு கருத்து தெரிவித்ததன் காரணமாக 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்தாண்டு செங்கல்பட்டு சிறையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் வாராகி மீது மேலும் 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
News September 18, 2025
செங்கல்பட்டு: B.Sc, BE, B.Tech, BCA படித்தவர்களா நீங்கள்?

செங்கல்பட்டு மக்களே ஐடி துறையில் சாதிக்க விரும்புபவரா நீங்கள்? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ. தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் கணினி அறிவியல், ஐடி துறையில் ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்களுக்கு டெவலப்பர் பணிக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மேலும், இதில் பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னணி தனியார் நிறுவனங்களில் உறுதியாக வேலை ஏற்படுத்தி தரப்படும்.<
News September 18, 2025
செங்கல்பட்டு: பட்டாவில் திருத்தம் செய்யனுமா? செம்ம ஈஸி!

தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அடுத்து வரும் ஜமாபந்தியில் இவை பரிசீலிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்படும். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.