News June 28, 2024
செங்கல்பட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.30 லட்சத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் பேசிய அவர், செங்கல்பட்டில் 13,000 டன் கொள்ளளவு கொண்ட புதிய வட்ட செயல்முறை கிடங்கு வளாகங்கள் ரூ.29 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 22, 2025
சமத்துவ கிறிஸ்மஸ் தின விழா; விஜய் பங்கேற்பு

மாமல்லபுரம் அருகேயுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று காலை10:30 மணியளவில் மனிதநேய நல்லிணக்க மாண்பைப் போற்றும் விதமாக தவெக சார்பில் சமத்துவ கிறிஸ்மஸ் தின விழா நடைபெற உள்ளது. இதில் தவெக தலைவர் விஜய் கலந்து கொள்ள உள்ளார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் QR குறியீட்டுடன் கூடிய அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளதால் அவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 21, 2025
செங்கல்பட்டு இன்று இரவு பணி காவலர் விவரம்

செங்கல்பட்டு இன்று (டிசம்பர்- 21) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 21, 2025
செங்கல்பட்டு: உள்ளூரில் அரசு வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க

செங்கல்பட்டு மாவட்டத்தின் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் பார்மசிஸ்ட், யோகா, டேட்டா எண்டரி ஆப்ரேட்டர், செவிலியர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், காலியாக உள்ள 88 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதி மாறுபடும். மாதம் ரூ.8,500 முதல் ரூ.60,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <


