News August 15, 2024
செங்கல்பட்டில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (ஆக.16) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில், 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு சுமாா் 5,000 பணியிடங்களுக்கு தேவைக்குரிய நபா்களை, நோ்முகத் தோ்வின் மூலம் தோ்வு செய்ய உள்ளனா். 8, 10, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ படித்த 18 – 35 வயது வரை உள்ளவா்கள் பங்கேற்கலாம்.
Similar News
News December 27, 2025
செங்கை: திருமண ஏக்கம்-பிறந்தநாள் அன்று தூக்கு!

சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் தீபிகா (28). திருமணத்திற்காக கடந்த 7 வருடங்களாக வீட்டில் வரன் பார்த்து வந்தனர். இருந்தும் வரன் அமையாமல் இருந்ததால் மன வருத்தத்தில் இருந்துள்ளார். நேற்று தனது பிறந்தநாள் அன்று கோயிலுக்கு செல்வதாக கூறி குளிக்க சென்றுள்ளார், நெடுநேரம் ஆகியும் கதவு திறக்காததால்,கதவை உடைத்தனர். அப்போது குளியல் அறையில் தூக்கில் தொங்கியபடி தீபிகா இறந்துள்ளார்.
News December 27, 2025
செங்கல்பட்டு பகுதியில் SIR சிறப்பு முகாம் அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் நடைபெறவுள்ள S I R சிறப்பு முகாம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஆட்டோ மூலம் அறிவிப்பு பிரச்சாரம் நேற்று மேற்கொள்ளப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வாக்காளர் சேர்ப்பு, திருத்தம் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டதாக தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
News December 27, 2025
செய்யூர் தொகுதியில் செங்கல்பட்டு கலெக்டர் சினேகா ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட செய்யூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை செங்கல்பட்டு ஆட்சியர் சினேகா, துறை சார்ந்த அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர். திருவாதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பள்ளி மற்றும் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின், பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.


