News January 23, 2025

செங்கல்பட்டில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன சுமார் 5000 காலி பணியிடங்கள் நிரப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது. வேலைநாடுவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும்படி மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார். யூஸ் பண்ணிக்கோங்க. மறக்காம ஷேர் பண்ணுங்க. 

Similar News

News November 20, 2025

செங்கல்பட்டு: மனநோயை போக்கும் வேதகிரீஸ்வரர் திருக்கோவில்

image

செங்கல்பட்டு மாவட்ட சிவன் திருக்கோவில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி உடனாய வேதகிரீஸ்வரர் திருக்கோவில். இங்கு சங்கு தீர்த்தம் எனும் புனித தீர்த்தம் உள்ளது. சித்தபிரமை மனநோயுடன் வாழ்பவர்கள் இத்தீர்த்தத்தில் மூழ்கிவிட்டு இறைவனை மனமுருக வேண்டினால் முழுமையாக குணமடைவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News November 20, 2025

செங்கல்பட்டு: பிணையம் இல்லாமல் ரூ.10 கோடி வரை கடன்!

image

புதிய சிறு, குறு நிறுவனங்களை தொடங்குபவர்களுக்கு ரூ.10 கோடி வரை பிணையமில்லாத கடன்களை பெற உதவி செய்கிறது மத்திய அரசின் CGTMSE திட்டம். இந்த CGTMSE திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வங்கிகளை அணுகி, வணிக கடனுக்கு விண்ணப்பித்த பிறகு, பிணையமோ அல்லது மூன்றாம் தரப்பு உத்தரவாதமோ இல்லாமல் ரூ.10 கோடி வரை கடன் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கு <>க்ளிக் <<>>செய்யவும். ஷேர் பண்ணுங்க!

News November 20, 2025

செங்கல்பட்டு: SIR சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் வெளியீடு

image

தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி தற்போது தீவிரமடைந்துள்ளது. இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு 1950 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்துள்ளது. மேலும் வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்பு கொள்வதற்கு 9444123456 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயனுள்ள தகவலை நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!