News May 7, 2025
செங்கல்பட்டில் சாலையை கடக்க முயன்ற முதியவர் பலி

மறைமலைநகர், கீழக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் செக்யூரிட்டி சுப்பிரமணி, 70. நேற்று இரவு, கீழக்கரணை பேருந்து நிறுத்ததில், ஜி.எஸ்.டி., சாலையை கடக்க முயன்றார். அப்போது பைக் மோதியதில் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பைக்கில் வந்த நபர் படுகாயமடைந்த நிலையில், அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். தகவலறிந்து வந்த தாம்பரம் போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 1, 2025
JUST IN: செங்கல்பட்டிற்கு நாளை விடுமுறை!

‘டிட்வா’ புயல் காரணமாக நாளை (டிச.2) காலை 8 மணி வரை செங்கல்பட்டில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், செங்கல்பட்டில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க!
News December 1, 2025
JUST IN: செங்கல்பட்டில் மழை கொட்டப் போகுது!

‘டிட்வா’ புயலின் காரணமாக மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே கனமழை பொழிந்து வரும் நிலையில், இன்றும்(டிச.1), நாளையும்(டிச.2) சுமார் 20 செ.மி அளவிற்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்க ஏரியாவில் மழையா..?
News December 1, 2025
செங்கல்பட்டு: 10th முடித்தால் எய்ம்ஸ்-ல் வேலை ரெடி.! APPLY

செங்கல்பட்டு மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் இங்கு <


