News August 8, 2024
செங்கல்பட்டில் காவல் அதிகாரிகள் பணியிடை மாற்றம்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தாம்பரம் துணை ஆணையராக பணியாற்றிய சுபலட்சுமி, சென்னை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு காவலர் பயிற்சி மைய எஸ்.பி செல்வநாகரத்தினம் திருவல்லிகேணி காவல் துணை ஆணையராகவும். தாம்பரம் காவல் ஆணையர் கவுதம் கொயல், சேலம் மாவட்ட எஸ்.பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News December 12, 2025
செங்கல்பட்டு: ஆட்கொல்லி புலி வண்டலூர் வருகை!

உதகை அருகேயுள்ள மாவனல்லா கிராமத்தில் கடந்த 24 ந்தேதி பழங்குடியின பெண்ணை T37 புலி கொன்று விட்டு தப்பியோடியது. கடந்த 16 நாட்களாக தப்பியோடிய புலியை வனத்துறையினர் தேடி வந்த நிலையில், நேற்று கூண்டு வைத்து பிடித்தனர். இதனையடுத்து பிடிக்கப்பட்ட T37 புலியை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு உதகை வனத்துறையினர் இன்று அனுப்பி வைத்துள்ளனர்.
News December 12, 2025
செங்கல்பட்டு: +1 மாணவி பாலியல் வன்கொடுமை!

பழைய மாமல்லபுரம் சாலை கேளம்பாக்கம் அடுத்த கழிப்பட்டூரில் குழந்தைகள் பாதுகாப்பு இல்லம் உள்ளது. அதை ஜோசப் பால்(58) நடத்தி வந்தார். இந்த காப்பதில் 34 பேர் தங்கி படித்து வந்தனர். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு +1 மாணவி ஒருவர் மிக சோர்வாக இருந்துள்ளார். ஆசிரியர்கள் விசாரித்ததில், ஜோசப் பால் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக அழுதுகொண்டே கூறியுள்ளார். புகாரின் பேரில் ஜோசப் பாலை போலீசார் கைது செய்தனர்.
News December 12, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (டிச.11) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


