News April 1, 2025
செகந்திராபாத் – ராமநாதபுரம் வார ரயில் ஏப்.30 வரை நீட்டிப்பு

செகந்திராபாத் – ராமநாதபுரம் (வ.எண் 07695) வாராந்திர ரயில் சேவை புதன் கிழமைகளில் (விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, காரைக்குடி) வழியாக நாளை (ஏப்.02) முதல் ஏப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறு மார்க்கத்தில் ராமநாதபுரம் – செகந்திராபாத் வாராந்திர ரயில் வெள்ளிக்கிழமைகளில் (வ.எண் 07696) ஏப்.4 முதல் மே 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 15, 2025
ராம்நாடு: டிராபிக் FINE -ஜ ரத்து செய்யனுமா??

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு நீங்கள் இந்த <
News October 15, 2025
ராமநாதபுரம்: ரயில் சேவை பாதிப்பு

ராமேஸ்வரம் அருகே உச்சிப்புளியில் சென்னையிலிருந்து வந்த போர்ட் மெயில் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று (அக். 14) பேண்டோகிராப் மின்கம்பியை மோதியதில் மின்கம்பி அறுந்து விழுந்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இன்று காலை 7:20 மணிக்கு ரயில் நின்றது. பின்னர் ராமேஸ்வரத்திலிருந்து டீசல் இன்ஜின் அனுப்பப்பட்டு. காலை 10:20 மணிக்கு ரயில் மீண்டும் இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
News October 15, 2025
ராம்நாடு: தனியார் வேலை வாய்ப்பு முகாம்

இராமநாதபுரம் மாவட்டம், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையம் நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் (அக், 17) நடைபெற உள்ளது. இதில் 20 க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. வேலை நாடுநர்கள் சுயவிபர குறிப்புகளுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.