News April 24, 2025

செகந்திராபாத் ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு

image

செகந்திராபாத்தில் இருந்து ராமநாதபுரத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 07695) இயக்கப்படுகிறது. புதன்கிழமை தோறும் செகந்திராபாத்தில் இருந்து புறப்படும் ரயில் காரைக்குடிக்கு வியாழக்கிழமை இரவு 8.30-க்கு சென்றடையும். தொடர்ந்து சிவகங்கை (இரவு 9.13), மானாமதுரை (இரவு 9.40), ராமநாதபுரம் (இரவு 10.28) வழியாக ராமேஸ்வரத்துக்கு நள்ளிரவு 12.15க்கு சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Similar News

News October 23, 2025

சிவகங்கை: ரூ.8.59 லட்சம் விதை விற்பனை செய்ய தடை

image

சிவகங்கை மாவட்ட அளவில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் திருநெல்வேலி விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதா பாய், ராமநாதபுரம் துணை இயக்குனர் அப்ராம்சா ஆகியோர் தலைமையில் விதை ஆய்வாளர்கள் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். உரிய விதிகளை பின் பற்றாத விதை விற்பனை நிலையங்களில் ரூ.8 லட்சத்து 59 ஆயிரத்து 635 மதிப்புள்ள விதை இருந்த களை விற்பனை செய்ய தடை விதித்துள்ளனர்.

News October 23, 2025

சிவகங்கை: ரூ.1 லட்சம் சம்பளத்தில் பேங்க் வேலை.. APPLY NOW.!

image

சிவகங்கை மக்களே BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி படித்து 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விரும்புவோர் bankofbaroda.bank.in <>க்ளிக் <<>>செய்து அக்.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.டிகரி படித்தவருக்கு SHARE பண்ணுங்க.

News October 23, 2025

சிவகங்கை: தலை தீபாவளிக்கு வந்த புதுப்பெண் தற்கொலை

image

எஸ்.புதுார் அருகே குன்னத்துார் களத்துப்பட்டியை சேர்ந்தவர் மச்சக்காளை மகள் ரூபியா 21. இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டையம்பட்டியை சேர்ந்த பாண்டி 30, என்பவருக்கும் ஜூலை 1 ல் திருமணம் நடந்தது.தலை தீபாவளியை கொண்டாடி அக். 19 ல் இருவரும் களத்துப்பட்டி வந்துள்ளனர். தீபாவளி கொண்டாட்டம் முடிந்து கணவர் உடனே கிளம்பியதால் ரூபியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

error: Content is protected !!