News April 24, 2025

செகந்திராபாத் – இராமேஸ்வரம் ரயில் நேரங்களின் பட்டியல்

image

வண்டி எண்- 07695 செகந்திராபாத்-இராமேஸ்வரம் இடையே இயங்கி வரும் சிறப்பு அதிவேக இரயில் நேற்று(ஏப்ரல் 23) இரவு 9.10 மணியளவில் அதிவேக இரயில் செகந்திராபாத்திலிருந்து புறப்பட்டு ஏப்.25 காலை 12.15 மணியளவில் இராமேஸ்வரம் வந்தடையும். இந்த சேவை மேலும் வரும் மே மாதம் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. *ஷேர் பண்ணுங்க 

Similar News

News September 18, 2025

ராம்நாடு: திமுக பிரமுகர் வீட்டில் கொள்ளை! விரைவில் விசாரணை!

image

ராமநாதபுரம் வாலாந்தரவை பகுதியை சேர்ந்தவர் திமுக பிரமுகர் பி.டி.ராஜா. இவரது வீட்டில் 2014ம் ஆண்டு மர்ம நபர்கள் வீடு புகுந்து அவரை கட்டிப்போட்டு ரூ.35 லட்சம் மதிப்புள்ள நகை பணத்தை கொள்ளையடித்தனர். இந்த வழக்கில் 5 பேர் கைதான நிலையில், நேற்று சிபிசிஐடி போலீசார் குற்றப் பத்திரிகையை ராமநாதபுரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்னர். இவ்வழக்கில் விரைவில் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News September 18, 2025

ராமேஸ்வரம் கடற்கரையில் 1,000 கிலோ குப்பைகள்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோர தூய்மை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி நேற்று (செப். 17) தேசிய கடலோர ஆராய்ச்சி நிறுவனம், MS சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், அழகப்பா பல்கலைக்கழகம், சென்னை NCCR இணைந்து 100க்கும் மேற்பட்டோர் கடற்கரை தூய்மை பணியில் ஈடுப்பட்டனர். இதில், சங்குமால், ஓலைக்குடா கடற்கைரைகளில் 600 கிலோ குப்பைகள் அகற்றப்பட்டன. அதேபோல தொண்டியில் சுமார் 500 கிலோ குப்பைகள் அகற்றப்பட்டன.

News September 18, 2025

ஆர்.எஸ்.மங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் மர்ம காய்ச்சல்

image

ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் பெரும்பாலானோர் மர்ம காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு உள்ளதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் குவியும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனந்துார், சோழந்துார், உப்பூர் திருப்பாலைக்குடி பகுதிகளில் பெரும்பாலோனோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பொதுமக்கள் குடிநீரை கொதிக்க வைத்து குடிப்பதை வழக்கமாக கொள்ள வேண்டும் என்று மருத்துவத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!