News April 2, 2025
‘சூப்பர் ஸ்டார் ஒற்றைக்கொம்பன்’ காளை உயிரிழப்பு

வாணியம்பாடி அடுத்த மாராப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பன்னீர், ‘வாணியம்பாடி சூப்பர் ஸ்டார் ஒற்றைக்கொம்பன்’ என்ற காளையை வளர்த்து வந்தார். இந்த காளையானது கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளில் நடைப்பெற்ற எருது விடும் விழாவில் பங்கேற்று, முதல் பரிசை பெற்று பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது. இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 1) காளை உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக அதன் உரிமையாளர் தெரிவித்தார்.
Similar News
News December 7, 2025
திருப்பத்தூர்: gpay, phonepay வைத்திருப்போர் கவனத்திற்கு!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News December 7, 2025
திருப்பத்தூர்: 10 ஆடுகளை திருடிய அண்ணன் தம்பி கைது

ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் சாந்தம்பாக்கம் ஊராட்சி அயிதம்பட்டு பகுதியை சேர்ந்த லட்சுமி(55) என்பவரின் 10 ஆடுகளை திருடிய 2 பேர் மீது நேற்று (டிசம்பர் 06) உமராபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் சோமலாபுரம் ஊராட்சி பகுதியை சேர்ந்த தனஞ்செழியன் மகன்கள் அண்ணன் தம்பி ராஜேஷ் வயது (30), சரத் வயது (28) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News December 7, 2025
திருப்பத்தூர்: இரவு நேர ரோந்துக் காவல் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று(டிச.6) இரவு முதல் நாளை விடியற் காலை வரை மாவட்டத்தில் ரோந்துப் பணியில் போலீஸ் அதிகாரிகளின் விவரம் மற்றும் எண்கள் மேலே உள்ள புகைப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், அவசர தேவைக்கு 100-ஐ டயல் செய்யலாம்.


