News August 8, 2024
சுற்றுலா விருது: விண்ணப்பிக்க கடைசி நாள்?

கரூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் முனைவோர்கள் சுற்றுலா விருதுக்கான விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து, 20.08.2024 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் தகவல்களை அறிய 04324-256257 மற்றும் அலைபேசி 9789630118 என்ற எண்களை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News December 8, 2025
கரூர் அருகே அதிரடி கைது!

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள காட்டாம்புதூர் பகுதியில் பணம் வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 54), கணேசன் (38), தேர்நிலை பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் (29), நடுப்பாளையத்தைச் சேர்ந்த சந்தானம் (42), எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த பாலமுருகன் (30) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 5 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
News December 8, 2025
கரூர்: கொடி நாள் துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்!

கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் இன்று கொடி நாள் 2025ம் ஆண்டிற்கான வசூல் பணியினை இன்று உண்டியலில் பணம் செலுத்தி துவக்கி வைத்தார். மேலும் கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கான ரூ.1,02,27,000 -ஐ 100% ஆக வசூல் செய்து கரூர் மாவட்டம் சாதனை புரிந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற தேநீர் உபசரிப்பு நிகழ்வில் 14 பயனாளிகளுக்கு ரூ.4,22,938 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.