News May 16, 2024

சுற்றுலா பயணிகள் குறைந்ததற்கு காரணம் என்ன?

image

கோடை விழா என்றாலே கோத்தகிரி, ஊட்டி, குன்னூர், கூடலூரில் உள்ள பூங்காக்களில் பல்வேறு கண்காட்சிகள் நடைபெறுவது வழக்கம். வழக்கத்துக்கு மாறாக இந்தாண்டு உதகையில் மலர் கண்காட்சி 10 நாட்கள் நடைபெறுகிறது. இ-பாஸ், தங்கும் விடுதி, கட்டணம் உயர்வு, முறையான பார்க்கிங் வசதி உள்பட எந்த வசதிகளும் செய்யாத காரணத்தால் இந்தாண்டு நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவுக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Similar News

News September 18, 2025

நீலகிரியில் காட்டு யானை அட்டகாசம்!

image

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட நியூ ஹோப் கிளை நூலகத்தை இன்று அதிகாலை காட்டு யானை ஒன்று நூலகத்தின் கதவை சேதப்படுத்தி உள்ளது. உணவு தேடி வந்த யானை கதவை சேதப்படுத்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. நூலகத்தின் கதவை உடைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மீண்டும் யானை உணவு தேடி வரலாம் என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.

News September 18, 2025

நீலகிரி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் மூலம் செயல்படுத்தப்படும் 5 திட்டங்களுக்கு இ-சேவை வழியாக விண்ணப்பிக்கலாம். அதன்படி கல்வி உதவித் தொகை, உதவி உபகரணங்கள், திருமண உதவித்தொகை, மாதாந்திர உதவித்தொகை போன்றவற்றை http://www.tnesevai.tn.gov.in என்ற இணைய தளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதை உடனடியாக மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News September 18, 2025

நீலகிரி: மரம் வெட்ட அனுமதிக்கு அலைய வேண்டாம்!

image

நீலகிரி மாவட்டத்தில் பட்டா உள்ள நிலங்களில் மரங்களை வெட்ட அனுமதி கோர http://
www.nilgiristreecuttingpermissons.org/ என்ற இணைய தளபக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இணையத்தில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க பட்டதும், அவை குழுவினரால் புலத்தணிக்கை செய்யப்பட்டு முடிவு செய்யப்படுகின்றன. மேலும் மரங்களை வெட்ட அனுமதி வழங்கும் உத்தரவும் இணையதளத்திலேயே வழங்கப்படும்.

error: Content is protected !!