News June 5, 2024
சுற்றுச்சூழல் தினம்: புதிய ஆட்சியர் வளாகத்தில் மரக்கன்று நடும் விழா

தருமபுரி புதியதாக கட்டப்படும் வரும் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி அவர்கள் மரக்கன்றுகள் நட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிலிப்பின்ஸ் ராஜ்குமார், கோட்டாட்சியர் காயத்ரி, வட்டாட்சியர் ஜெயசெல்வன் , வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Similar News
News April 21, 2025
ஓட்டுநர், நடத்துநர் பணி.. இன்றே கடைசி நாள்

மாநில மற்றும் சேலம் போக்குவரத்து கழகத்தில் உள்ள 804 ஓட்டுநர், நடத்துனர் காலிப்பணியிடங்கள் நிறப்பட உள்ளன. அதன்படி 01.07.2025 தேதியின்படி, 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால், உடனே <
News April 21, 2025
ஒகேனக்கல் ஆற்றில் மூழ்கி கிராம நிர்வாக அலுவலர் உயிரிழப்பு

செங்கல்பட்டை சேர்ந்த முருகேசன் திருக்கழுக்குன்றம் கிராம அலுவலராக பணியாற்றி வந்தார். நேற்று ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்த நிலையில் ஆலம்பாடி காவிரி ஆற்றில் குளித்த போது ஆழமான பகுதியில் மூழ்கி உயிரிழந்தார். தீயணைப்புத் துறை மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து முருகேசன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ஒகேனக்கல் காவலர்கள் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News April 20, 2025
மொரப்பூர் அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

மொரப்பூர் அண்ணல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர்(23). இவர் நேற்று தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்று உள்ளார், அப்போது ஆற்றில் மூழ்கி இறந்துள்ளார். இதுகுறித்து அரூர் தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் அரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் காமராஜ் தலைமையிலான மீட்பு குழுவினர் விரைந்து சென்று ஆற்றில் சடலமாக கிடந்த கிஷோரை மீட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.