News January 24, 2025

சுருளி அருவியில் யானைகள் நடமாட்டம்

image

சுருளி அருவியில் குளிக்க தினமும் 100க்கணக்கில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். தற்போது யானைகள் கூட்டம் அடிக்கடி வந்து செல்கிறது. வெண்ணியாறு பகுதியில் யானைகள் முகாமிடுவது வாடிக்கையாகும்.அப்போது அருவி பகுதியை ஒட்டி யானைகள் திடீர் திடீரென வந்து செல்வதால் அருவியில் குளிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்வது என்பதில் வனத்துறை அதிகாரிகள் குழுப்பத்தில் உள்ளனர்.

Similar News

News December 12, 2025

தேனி மக்களே ரேஷன் கார்டு இருக்கா.. முக்கிய அறிவிப்பு

image

தேனியில் ரேஷன் கார்டு சேவை குறித்த மக்கள் குறைதீர் முகாம் தேவதானப்பட்டி, உப்பார்பட்டி, கொப்பையன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, கொட்டக்குடி ஆகிய இடங்களில் நாளை (டிச.13) காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறுகிறது. இம்முகாமில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு (ம) மாற்றம், கடை மாற்றம் ஆகியவை குறித்து மனுக்கள் அளிக்கலாம். எல்லோரும் தெரிஞ்சிக்க SHARE பண்ணுங்க.

News December 12, 2025

தேனி: கணவனை தாக்கிய மனைவி மீது வழக்கு

image

மதுரை டி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் ரெங்கநாதன் வினோதினி தம்பதியினர். ரெங்கநாதன் 6 ஆண்டுகளாக சவுதியில் பணிபுரிந்து ஒரு ஆண்டுக்கு முன் மதுரை வந்தார். பெற்றோருடன் இருந்த மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். வரமறுத்த வினோதினிக்கு ஆதரவாக 6 பேர் அவரை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ரெங்கநாதன் GH-ல் அனுமதிக்கப்பட்டார். வடகரை போலீசார் வினோதினி உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

News December 12, 2025

தேனி: சிறுமி கர்ப்பம்; தொழிலாளி மீது போக்சோ

image

நாமக்கல், திருச்செங்கோட்டை சேர்ந்தவர் ரவி. இவர் ஒரு சிறுமியை காதலித்துள்ளார். இந்நிலையில் ரவி பெரியகுளத்தில் வேலை செய்த நிலையில், தகவல் அறிந்து பெரியகுளம் வந்த சிறுமியை ரவி கடந்த ஜுன் மாதம் திருமணம் செய்தார். தற்போது சிறுமி 4 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து பெரியகுளம் ஊராட்சி ஊர்நல அலுவலர் அளித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோவின் கீழ் ரவி மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!