News April 5, 2025
சுய உதவி குழுக்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆட்சியர்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மகளிர் சுய உதவி குழுக்களில் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு விலை நிர்ணயம் (அ) சந்தைப்படுத்தல் உருவாக்கும் வகையில் மண்டல பொது வசதி மையம் துவங்கப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தில் பயன்பெற தகுந்த ஆவணங்களுடன் வரும் 8ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை வழங்குமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 8, 2025
சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியர்

தஞ்சாவூர் அருகே கரந்தையை சேர்ந்த கணேசன் (65), தெருவில் விளையாடிய, 10 வயது சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி அழுதுகொண்டே வீட்டிற்கு வந்து பெற்றோரிடம் நடந்ததை கூற அதிச்சியடைந்த பெற்றோர்கள் தஞ்சாவூர் மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து கணேசனை போக்சோ சட்டத்தின் கீழ், நேற்று போலீசார் கைது செய்தனர்.
News April 8, 2025
உலகம் வியக்கும் தஞ்சாவூர் பொருட்கள்

தமிழ்நாட்டில் புவிசார் குறியீடு பெற்ற 62 பொருட்களில், 10 பொருட்கள் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவையாகும் அவை: 1. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை 2. தஞ்சாவூர் ஓவியம் 3. சுவாமிமலை வெங்கல சிலை 4. நாச்சியார்கோவில் விளக்கு 5. தஞ்சாவூர் வீணை 6. தஞ்சாவூர் கலைத்தட்டு 7. கருப்பூர் கலம்காரி ஓவியங்கள் 8. தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு 9. கும்பகோணம் வெற்றிலை 10. நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் ஆகியவை ஆகும். ஷேர் பண்ணுங்க
News April 8, 2025
தஞ்சை அருகே வேலை வாய்ப்பு

திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் (Digital Marketing Manager) உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.25,000 வரை வழங்கப்படுகிறது.12ஆம் வகுப்பு முடித்துவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <