News June 27, 2024
சுய உதவிக்குழுவினருக்கு பயிற்சி

மாவட்ட அளவில் உள்ள சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வுப் பயிற்சி அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் 100 பேர் வீதம் 388 ஊராட்சி ஒன்றியங்களில், நுகர்வோரின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வு பயிற்சி, நுகர்வோர் எதிர்கொள்ளும் குறிப்பிட்ட துறை சார்ந்த பிரச்னைகளை தீர்வு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
Similar News
News December 5, 2025
சேலம் விமான நிலையத்திற்கு பயணிகள் கோரிக்கை!

சேலம் மாவட்டம் ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும், அலையன்ஸ் ஏர் நிறுவனம், அடிக்கடி தனது சேவையை ரத்து செய்து வருவதால், பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும், எனவே இதுபோன்று அடிக்கடி ரத்து செய்யாமல் பயணிகளின் நலன் கருதி, முறையாக விமான சேவை இயக்க வேண்டும் என்று பயணிகள், காமலாபுரம் விமான நிலையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
News December 5, 2025
இண்டிகோவில் மட்டும் ஏன் பிரச்னை? என்ன நடக்கிறது?

மற்ற அனைத்து விமான நிறுவனங்களும் வழக்கம்போல் இயங்கும்போது. இண்டிகோவில் மட்டும் ஏன் பிரச்சனையாக இருக்கிறது? DGCA-வால் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட, விமானிகளுக்கு கூடுதலாக ஓய்வு நேரம் என்ற விதி முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆனால், இதற்காக DGCA 6-18 மாதம் கால அவகாசமும் வழங்கியது. இருப்பினும், இண்டிகோ கூடுதலாக ஒரு விமானியை கூட பணியமர்த்தவில்லை. இதுவே இந்த குழப்பங்களுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
News December 5, 2025
பாக்.,ல் இந்து கோயில்களின் நிலைமை இதுதான்

பாகிஸ்தானில் உள்ள 1,871 கோயில்களில் 37 மட்டுமே இயங்குவதாக அந்நாட்டு பார்லி., குழு முன் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் சொத்து மீட்புக் குழு (ETPB) கோயில்களை முறையாக பராமரிக்க தவறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இக்குழுவின் தலைமைப் பதவியை முஸ்லிம் அல்லாத நபர் ஒருவருக்கு வழங்கவேண்டும் என அங்குள்ள சிறுபான்மையினர் கோரிக்கை வைக்கின்றனர்.


