News April 26, 2025
சுந்தரவடிவேல் சுவாமிகளின் ஆருடம் நடக்குமா?

2026 தேர்தலில் திமுகவுக்கு பின்னடைவு ஏற்படும், திமுக அமைச்சர்களின் நாக்கில் சனி இருப்பதால் பலர் ஜெயிலுக்குப் போவார்கள். 2027க்கு பின் தமிழகத்தில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் காலம் வரும் என்று தேனி மகாசக்தி பீடம் மடாதிபதி சுந்தரவடிவேல் சுவாமிகள் ஆருடம் கூறியுள்ளார். கடந்த காலங்களில், ஜெயலலிதா ஜெயிலுக்கு போவார், 3ஆவது முறையாக மோடி பிரதமர் ஆவார் என்றும் இவர் ஆருடம் கூறியது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 6, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 06.11.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ஆண்டிபட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சிவசுப்பு தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News November 6, 2025
தேனி: நவ.8ம் தேதி நுகர்வோர் விழிப்புணர்வு முகாம்

தேனி மாவட்டம், உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைகேட்கும் கூட்டம் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் 08.11.2025 அன்று நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார். பொது மக்கள் தங்கள் குறைகளை தெரிவித்து பயன் பெறலாம் என்றார்.
News November 6, 2025
தேனி: தொழிலாளர் நல நிதி செலுத்த அறிவுறுத்தல்

தொழிலாளர் நல நிதி சட்டத்தின்படி தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், ஓட்டல்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் தொழிலாளர் பங்கு ரூ.20, நிறுவனத்தின் பங்கு ரூ.40 என கணக்கிட்டு செலுத்த வேண்டும். தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்தாண்டிற்கான தொழிலாளர் நல நிதியை 2026 ஜன.31க்குள் செலுத்த வேண்டும் என தேனி தொழிலாளர் நலத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


